நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, பாறையின் மேலிருந்து வழுக்கி விழுந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள அருவியில் வழுக்கு பாறைகள் உள்ளன. இதனை கடக்க முயன்ற பெண் காட்டு யானை, எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்தது. இதில் யானை உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக முதுமலையிலிருந்து வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் யானை வழுக்கி விழுந்து உயிருக்கு போராடும் நெஞ்சை உலுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.