``எந்த ரூல்ஸ்-ல சார் இருக்கு...'' | அதிகாரிகளை அலற விட்ட பெண்

Update: 2025-03-24 13:55 GMT

குளித்தலை அருகே நச்சலூரில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி அனுமதியின்றி உயர்மின் கோபுரம் அமைத்து வருவதாக பெண் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த கலா என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் மின்வாரிய அலுவலர்கள் அனுமதியின்றி

மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது..இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பணியை தடுக்க முயற்சித்த நிலையில் குளித்தலை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்