விவசாயிகள் வயிற்றில்பாலை வார்த்த மத்திய அரசு - வெளியான தகவல்

Update: 2025-03-24 15:46 GMT

வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரி முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். வெங்காயத்தின் விலை குறைய தொடங்கி இருப்பதால், ஏற்றுமதி வரியை 20 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியம் சதவீதமாக மத்திய அரசு குறைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் நமது விவசாயிகள் விளைவிக்கும் வெங்காயம் எந்தவிதமான ஏற்றுமதி வரியும் இன்றி உலக சந்தைகளுக்கு செல்லும் என கூறிய சிவராஜ் சிங் சவுகான், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதும் உறுதி செய்யப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்