பெண் தலைமை காவலர் தற்கொலை செய்தது ஏன்? - அதிர்ச்சி தகவல்
சென்னை புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் பெண் தலைமை காவலர் செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கையை சேர்ந்த செல்வி, தனது மாமா மகன் நல்லுசாமியை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார். ஆனால் நல்லுசாமி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, ஏ பிளஸ் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவரை எவ்வளவோ திருத்த முயன்றும் பலனளிக்காத நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மனோ என்பவர் கொலை வழக்கிலும், நல்லுசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
Next Story