விபத்தை ஏற்படுத்திவிட்டு விவசாயியை தாக்கிய பஸ் டிரைவர் - வளைத்து பிடித்து மக்கள் செய்த சம்பவம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விபத்தை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டவரை அடித்து தாக்கிய ஓட்டுநரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஓமலூரில் இருந்து தின்னப்பட்டி சென்ற அரசு பேருந்து, நாலுக்கால்பாலம் அருகே பைக்கில் சென்ற விவசாயி ராஜேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயி, திரும்பி வந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் தமிழ்ச்செல்வனிடம் கேட்டதற்கு அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைத்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.