"மடியில் சுமந்து கரையில் போட்டால் நினைத்தது நடக்கும்" -அலைமோதிய பெண்கள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூர் நாடியம்மன் கோயிலில், குளவெட்டு எனப்படும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோயில் அருகே உள்ள குளத்தில் வெட்டப்படும் மண்ணை, பெண்கள் மடியில் சுமந்து சென்று கரையில் போட்டால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதன்படி, ஏராளமான பெண்கள் பங்கேற்று, குளத்தில் வெட்டப்பட்டிருந்த மண்ணை மடியில் ஏந்தி கரையில் கொண்டு சென்று போட்டனர். இதில் இஸ்லாமிய பெண்களும் பங்கேற்றனர்.