கடத்தப்பட்ட மகளை மீட்டு தர கோரி தந்தை போராட்டம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே, மகளை கடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தந்தை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வெள்ளிக் கிழமை, வீட்டில் தனியாக இருந்த 19 வயது மகளை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக, தந்தை விஜயகாந்த் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தனது உறவினர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
Next Story