வெப்பத்தின் தாக்கத்தை தீர்த்த மழை.. கொளுத்திய வெயில்.. குளிர்ந்த நிலம்.. தேனியில் அடைமழை | Thanthitv

Update: 2024-06-02 15:43 GMT

தேனி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தென்மேற்கு பருவக்காற்று வீசிய போதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இந்நிலையில் வைகை ஆறு நீர்பிடிப்பு பகுதிகளான கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, பாலூத்து, அண்ணாநகர், கண்டமனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை சுமார் 2 மணிநேரம் நீடித்தது. கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடமலைக்குண்டு கிராமத்தில் சாக்கடைகள் சரிவர தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவுநீர் மழைநீருடன் கலந்து சாலைகளில் ஓடியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் கடமலைக்குண்டு, வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் மாலைநேரங்களில் இப்பகுதியில் குளிர்ந்த காற்றும் வீசியதால் வெப்பத்தில் தவித்து வந்த மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்