டிரான்ஸ்பார்மர் வெடித்த விபரீதம் - மைக்ரோ நொடியில் தப்பிய உயிர்.. அருகே நிற்காதீர்கள்.. உஷார்

Update: 2024-10-22 03:50 GMT

மின்சார வயர் அறுந்து விழுந்து, இளைஞர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் உள்ள தாம்பரம் அருகே ராஜகீழ் பாக்கத்திலிருந்து மாடம்பாக்கம் செல்லும் சாலையில் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இதன் அருகே அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று திடீரென வெடித்து, தீப்பொறி கிளம்பியதை தொடர்ந்து, மின்சார ஒயர்கள் அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது, அவ்வழியே வந்த இரு சக்கரன வாகனத்தின் மீது விழுந்தது. வாகனத்தில் வந்த இளைஞர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, கிழே குதித்து உயிர் தப்பினார். அந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் இளைஞருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த, மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, மின் ஒயரை சரி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்