போலீசாரை தாக்கிய நபர் நீதிபதியின் சொந்த ஜாமினில் விடுவிப்பு

Update: 2025-01-06 01:53 GMT

கம்பம் அருகே ரேக்ளா பந்தயத்தின்போது போலீசாரை தாக்கிய நபர், நீதிபதியின் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 150-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் பங்கேற்றன. அப்போது 2 மாட்டு வண்டிகள் ஒன்றுக்கொன்று உரசிச் சென்றபோது, வண்டி ஓட்டிச்சென்ற ராஜா என்ற சாரதி கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாவின் உறவினர் ஹரிகிருஷ்ணன், விழா கமிட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் ஹரிகிருஷ்ணனை வெளியேற்ற முற்பட்டபோது, போலீசாரின் சட்டையை பிடித்து தாக்கியுள்ளார். தொடர்ந்து ஹரிகிருஷ்ணனை மடக்கிப் பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிபதியிடம் போலீசார் ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதியின் சொந்த ஜாமினில் ஹரி கிருஷ்ணன் விடுவிக்கப்பட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்