அன்பு கணவனுக்குள் புகுந்த சந்தேக சாத்தான்..கதவிற்கு உள் பக்கம் கேட்ட உயிர் பிரியும் கடைசி நொடி அலறல்
அன்பு கணவனுக்குள் புகுந்த சந்தேக சாத்தான்...
கதவிற்கு உள் பக்கம் கேட்ட உயிர் பிரியும் கடைசி நொடி அலறல்... "அம்மா...அம்மா.." வெளியே நின்று கதறிய மகன்
ஓசூர் அடுத்த பாகலூர் அருகே உள்ளது கீழ்சூடாபுரம் பகுதி....
கல்பனாவின் கொலை செய்தி அன்று ஊருக்குள் பூகம்பமாய் வெடித்திருந்தது. மகனின் கண்ணெதிரே தாய், கழுத்தறுத்து துடிதுடிக்க கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கோரத்தை செய்தது வேறு யாருமல்ல... கல்பனாவின் இரண்டாவது கணவன் தான்.
கொல்லப்பட்டவர் கல்பனா. வயது 38. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகனை மட்டும் தன்னோடு அழைத்துக் கொண்டு பிரிந்து வந்திருக்கிறார் கல்பனா.
அன்று முதல் தனிமையில் வசித்து வந்த கல்பனாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்ற நபரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பழக்கம் காதலாக மாற கல்பனா, ஆனந்தகுமாரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.
40 வயதான ஆனந்தகுமார் ஒரு பெயிண்டர். கல்பனாவின் முதல் கணவனுக்கு பிறந்த மகனும் ஆனந்தகுமாருடனே வேலைக்கு செல்வது வழக்கம். கல்பனா வீட்டுவேலை செய்து வந்த நிலையில் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் சம்பவத்தன்று வெளியே சென்று வீடு திரும்பி கல்பனாவின் மகனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. வீட்டின் கதவு தாழிடப்பட்டிருந்த நிலையில், “என்ன காப்பாத்துங்க காப்பாத்துங்க“ என தாயின் கதறல் சத்தம் மட்டும் உள்ளே இருந்து கேட்டிருக்கிறது.
கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார் கல்பனாவின் மகன். உள்ளே இருந்து ஆனந்தகுமார் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட, கல்பனாவோ குத்துயிரும் கொலையுயிருமாக ரத்த வெள்ளத்தில் மிதந்திருக்கிறார்.
உடனே ஆம்புலென்சில் ஏற்றி கல்பனாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. கல்பனா இறந்து போயிருக்கிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கல்பனாவின் சடலத்தை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
அப்போது ஆனந்தகுமார் தான் தாயை கொன்று விட்டு தப்பியதாக போலீசாரிடம் கூறி இருக்கிறார் கல்பனாவின் மகன். இந்த பயங்கரத்திற்கு காரணம் போதையும், சந்தேகமும்...
ஆனந்தகுமார் மதுவுக்கு அடிமையானவர். தினமும் குடித்துவிட்டு வந்து கல்பனாவை அடித்து துன்புறுத்துவது வழக்கம். குடிக்க பணம் இல்லையென்றாலும் கல்பனாவுக்கு அடி உதை உண்டு.
மேலும் கல்பனாவுக்கு கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகித்திருக்கிறார் ஆனந்தகுமார். கல்பனா அழகாக இருப்பதால் அவர் வேறு நபருடன் தகாத உறவில் இருப்பாரோ என்ற குரூர புத்தி அவரின் மனதை ஆட்கொண்டிருக்கிறது. இதனால் அதை காரணமாக வைத்தே கல்பனாவோடு தினமும் சண்டையிட்டு வந்துள்ளார்.
அப்படி இருக்க, சம்பவத்தன்றும் குடித்து விட்டு வந்த ஆனந்தகுமார், கல்பனாவோடு சந்தேகபுத்தியில் சண்டைபோட்டிருக்கிறார். அது ஒருகட்டத்தில் தீவிரமடைய ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், கட்டையால் கல்பனாவை கொடூரமாக தாக்கியிருக்கிறார்.
பின் பெயிண்டிங் வேலைக்கு பயன்படுத்தப்படும் பிளேடால், கல்பனாவின் கழுத்தை கரகரவென அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவியை கொன்ற இரண்டாவது கணவன் ஆனந்தகுமாரை வலை வீசி தேடி இருக்கிறார்கள். அப்போது தான் ஆனந்த குமார் பெங்களூருவுக்கு சென்று தலைமறைவானது தெரிந்துள்ளது.
தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு சென்று ஆனந்தகுமாரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனந்த குமார் கைது செய்யப்பட்ட பிறகே இந்த கொலைக்கு பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று தெரியவரும்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவியை கொன்ற இரண்டாவது கணவன் ஆனந்தகுமாரை பெங்களூரில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகே இந்த கொலைக்கு பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று தெரியவரும்.