அடுத்ததடுத்து 10 மாணவர்களுக்கு... வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் - பீதியில் பெற்றோர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே கிராமத்தில் பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோட்டாலம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் கண்டறியப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மருத்துவர்கள் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பயிற்சி செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மஞ்சள் காமாலை பரவை அச்சத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில், மருத்துவ முகாம்களை தீவிரப்படுத்த பெற்றோர் கோரிக்கை விடுக்கிறார்கள்.