சடலத்தை நடுரோட்டில் வைத்து போராட்டம் செய்த மக்களை.. குண்டுகட்டாக தூக்கி சென்ற போலீஸ்
திருவண்ணாமலை மாவட்டம், அல்லப்பனூரை சேர்ந்த
ரவேந்திரன் என்பவர் கடந்த 19ஆம் தேதி இரு சக்கர வாகனமும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்து, 21ஆம் தேதி உயிரிழந்தார். தண்டராம்பட்டு காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுனருக்கு சாதகமாக வழக்கு பதிவு செய்து,
ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக ரவேந்திரனின் உறவினர்கள் குற்றம் சாட்டுகினர். உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு நேற்று மாலை எடுத்து வந்த ரவேந்திரன் உடலை இன்று சாலையின் குறுக்கே வைத்து 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் முதியவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் கைது செய்து, இழுத்துச் சென்றனர்.