பழனி அருகே ஒட்டன் சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குபட்ட கீரனூரீல் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், கட்சியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது வியப்பை ஏற்படுத்தியது. கூட்டம் நடத்த கடந்த 8,9ம் தேதிகளில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் கபடி போட்டி நடத்தப்பட உள்ளதாக அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு 14,15 தேதிகளில் கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், 8,9ம் தேதி நடக்கவிருந்த கபடிபோட்டி 14,5க்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. 22ம் தேதி கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 3 மணி வரை அனுமதி கொடுக்கப்படாத நிலையில் “வெற்றிகரமாக 2வது பயம் கொண்டாட்டம்“ என்ற தலைப்பில் "அந்த பயம் இருக்கணும்" என்று கூறி கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் தவெகவினர் கொண்டாடியது வியப்பை ஏற்படுத்தியது.