Facebook-ல் ஆசை வார்த்தைகள்... சுண்டி இழுத்த மோசடிக் கும்பல் - தெருவுக்கு வந்த தொழிலதிபர்

Update: 2024-11-08 07:31 GMT

கடந்த ஜூலை மாதம் பேஸ்புக் மூலம் மதுரையை சேர்ந்த தொழிலதிபருக்கு அறிமுகமானவர், அவரை ஆன்லைன் வர்த்தக வாட்ஸ் அப் குழுவில் இணைத்து ,அதில் பல மடங்கு லாபம் பார்ப்பது போல் பொய்யான ஆவணங்களை பதிவிட்டும் வந்துள்ளார்.

இதனை நம்பிய தொழிலதிபர் சுமார் 92 லட்சம் வரை வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக செலுத்தியுள்ளார். லாபம் எதுவும் வராதது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது,

பதில் எதுவும் தெரிவிக்காமல் வாட்ஸ் அப் குழு கலைக்கப்பட்டுள்ளது.

தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் மாநில சைபர் கிரைம் போலீசார் , மோசடியில் ஈடுபட்ட நாமக்கல் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார், அவரது நண்பர்களான சந்திரசேகரன் மற்றும் சுரேஷ் ஆகிய மூவரை கைது செய்தனர். சமூக வலைதளங்கள் மூலம் பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்ட இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் இதுவரை மூன்று கோடி வரை பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்