பனையூரில் நடந்த முக்கிய மீட்டிங்..கூண்டோடு மாற்றமா..?அன்புமணி எடுக்கும் அதிரடி ஆக்சன்

Update: 2025-01-03 08:32 GMT

சென்னை பனையூரில் தொடங்கப்பட்டுள்ள புதிய அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக கட்சியை பலப்படுத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு, கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த உள்ளார். சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்களை நீக்கிவிட்டு, துடிப்போடு செயல்பட கூடியவர்களுக்கு பதவி வழங்க அன்புமணி முடிவெடுத்து இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . இதுவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்