மழை விட்டு 10 நாளாகியும் வடியாத நீர்.. - துர்நாற்றம் வீசுவதால் மக்கள் வேதனை..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலவழுத்தூர் நூரியா தெருவில் மழை பெய்து பத்து நாட்கள் ஆகியும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர் இன்னும் வடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது தேங்கியுள்ள மழை நீர் பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக காட்சியளிப்பதாகவும், தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதுடன், விஷ ஜந்துக்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.