தனியார் பேருந்துகளை இயக்குவதா? வேண்டாமா? - தனியார் பேருந்து உரிமையாளர்கள் அவசர ஆலோசனை..
கடலூர் கொத்தட்டை பகுதியில் நாளை மறுநாள் முதல் புதிய சுங்கச்சாவடி செயல்பட உள்ளது. 125 ரூபாய் முதல் ஆயிரத்து 210 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே சாலையில் விழுப்புரம் கெங்கராம் பாளையத்தில் ஜனவரி 3ம் தேதி முதல் டோல்கேட் செயல்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. கொத்தட்டை சுங்கச்சாவடிக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் எதிர்ப்புகள் எழுந்துள்ளன... அனைத்து கட்சியினர் சார்பில் நாளை மறுநாள் கொத்தட்டை டோல்கேட் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளுக்கும் மிக அதிக கட்டணம் இருப்பதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் 23ம் தேதி முதல் தனியார் பேருந்துகளை இயக்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது...