உக்கிரத்தை சற்றும் குறைக்காத தாமிரபரணி - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-12-14 09:21 GMT

ஏரல் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைமட்ட பாலம் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், 3 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால் இன்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீவைகுண்டம் அணையில் சுமார் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று ஏரல் தரைமட்ட பாலம் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஏரல் தரைமட்ட பாலத்தில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் மூழ்கடிக்கப்படுவதால், மேல்மட்ட பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், மேல்மட்ட பாலம் உடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தற்காலிகமாக தரைமட்ட பாலத்தை சரி செய்து அதன் மூலம் போக்குவரத்து நடைபெற்றது. மேல்மட்ட பாலம் சீரமைக்கப்படாததால் தரைமட்ட பாலத்தை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கால் தரைமட்ட பாலம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால் இன்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்