கைநழுவிய பலநாள் கனவு... CM வரை சென்ற விவகாரம்... அதிரடி உத்தரவால் மீண்டு(ம்) வந்த லட்சியம்

Update: 2024-12-24 16:07 GMT

ஒடிசாவில் நடைபெறும் தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்க, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 15 மாணவர்கள் தகுதிபெற்றனர். 3 மாதங்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில், பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் சங்கர் அனுமதிக்க மறுத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த நிலையில், மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க பொறுப்பு துணைவேந்தர் அனுமதி அளித்தார். உடனடியாக நடவடிக்கை எடுத்த, முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள், தாமதமாக அனுமதி வழங்கியதால் ரயிலை தவற விட்டதாக தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்