பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட கால்பந்து வீராங்கனை!மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு | Mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். காராம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி, பியூலா நான்சி ஆகிய இருவரும் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனர். கால்பந்து வீராங்கனைகளான இருவரையும் பயிற்சிக்காக அவர்களது தம்பி விக்ரந்த் ராஜ் ஒரு ஸ்கூட்டியில் அழைத்து சென்றுள்ளார். காராம்பள்ளம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பேருந்து ஸ்கூட்டி மீது மோதியதில் பியூலா நான்சி தலையில் அடிபட்டு பலியானார். மற்ற இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.