ஜல்லி வழுக்கிய வாகனம்..! சகோதரனை காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம்.. சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-12-24 16:11 GMT

சிவகங்கை அருகே விபத்தில் சிக்கிய சகோதரரை காப்பாற்ற சென்ற அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய கோட்டை பஞ்சாயத்து கிளர்க்காக பணிபுரிந்து வரும் முனீஸ்வரன், இவரது சகோதரர் தென்பாண்டி சிங்கம் அவருடைய நண்பர் ரியாஸ் உடன் சுந்தரா நடப்பு அருகே சென்றபோது சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லி கற்களினால் அவரது இருசக்கர வாகனம் வழுக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து சகோதரரை காப்பாற்ற விபத்து நடந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற முனீஸ்வரனும் ஜல்லி கற்களில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உரிய எச்சரிக்கை பலகை வைக்கப்படாததே இந்த விபத்திற்கு காரணம் என கூறி கிராம மக்கள் சிவகங்கை அரசு மருத்துவமனை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்