ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் தேர் கவிழ்ந்த விபத்தில், உயிரிழப்பு இரண்டாக அதிகரித்துள்ளது. ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஹூஸ்கூரில், பழமையான மதுரமா கோயில் தேர் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது 7 தேர்கள் இழுத்து வரப்பட்ட நிலையில், 127 அடி உயரமுள்ள தேர், பலத்த காற்று அடித்ததால் திடீரென சாய்ந்தது.
இந்த விபத்தில், லோகித் என்ற ஐ.டி. ஊழியர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், பொம்மை பொருட்கள் விற்பதற்காக பெங்களூரில் இருந்து குடும்பத்தோடு வருகை தந்திருந்த ஜோதி என்ற 16 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பு இரண்டாக அதிகரித்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.