திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பக்தர்கள் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழ்நாடின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள், 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.