"தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் இனி இது இருக்கும்" - வெளியான முக்கிய தகவல்
மின்னணு கருத்து பெட்டி முதற்கட்டமாக 7 கோவில்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இனி அனைத்து கோவில்களிலும் வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்... கார்த்திகை பௌர்ணமி தினத்தை ஒட்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் சான்றோர் உருவாக்கிய இடங்களில் எல்லாம் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்தார்... மின்னணு கருத்து பெட்டியை பக்தர்கள் அனைவரும் வரவேற்றுள்ளதாகவும், முதற்கட்டமாக 7 கோவில்களில் மின்னணு கருத்துப் பெட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிக பக்தர்கள் வரக்கூடிய அனைத்து கோவில்களிலும் வைக்கப்படும் என்று உறுதியளித்தார்...