தமிழகம் முழுவதும் இன்று வெளியாகும் அறிவிப்பு | Voters List

Update: 2025-01-06 05:50 GMT

தமிழகம் முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை நேரிலும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் 23 லட்சத்து 9 ஆயிரத்து 391 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை கடந்த டிசம்பர் 24-ம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டு இறுதி

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடங்கியது. இந்நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர். அதன் பின்பு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்