வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் - மத்திய அரசு பாராட்டு

Update: 2025-01-04 02:02 GMT

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாயும், மளிகை பொருள் தொகுப்பும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், புதிதாக ஆயிரத்து 666 நியாய விலைக்கடை திறக்கப்பட்டதாகவும், விருப்பத்தின்படி, அரிசிக்கு பதில் கோதுமை பெறும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், , கடந்த மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாயும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் இதர பகுதி மக்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 230 நெல் கொள்முதல் நிலையங்களும், 259 மேல் கூரையுடன் நெல் சேமிப்புத் தளங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புப் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு மத்திய அரசு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்