#BREAKING || முயல் வேட்டைக்கு சென்றவர் கரிக் கட்டையாகி பலி - ஸ்ரீவில்லிபுத்தூரில் படுபயங்கரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் விலங்குகளை வேட்டையாட சென்ற முருகன் என்பவர் மின்வேலியில் சிக்கி பலி ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது இந்த பகுதியில் யானை புலி மிலா மான் காட்டெருமை காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஒட்டியுள்ள தொட்டியபட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வெங்காயம் தக்காளி பழ வகைகள் விவசாயம் செய்து வருகிறார் இந்த நிலையில் இரவு நேரத்தில் விலங்குகள் காட்டுக்குள் வராமல் இருக்க வேலி அமைத்துள்ளார் இதில் மின்சாரம் பொருத்தி உள்ளார் இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த முருகன் என்பவர் முயல் வேட்டையாடுவதற்காக விவசாய நிலத்துக்குள் சென்றுள்ளார் அப்போது முருகன் விவசாய நிலத்தில் கிடந்த வேலியை மீத்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார் தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் முருகன் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.