ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய பெண் தூக்கிட்டு த*கொலை

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய பெண், மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரதராஜபுரம், பி.டி.சி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த நடராஜன் - புனிதா தம்பதி ஆன்லைன் லோன் செயலிகளில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த புனிதா, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்