Veera Dheera Sooran | யார் `வீர தீர சூரன்'..? தியேட்டரில் வெடித்த ரசிகர்கள் மோதல் -பரபரத்த ராம்நாடு

Update: 2025-03-27 17:16 GMT

ராமநாதபுரத்தில் வீர தீர சூரன் படத்தை பார்க்க வந்த ரசிகர்களிடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திரையரங்கில் வீர தீர சூரன் படத்தை பார்ப்பதற்காக குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது ரசிகர்கள் இருதரப்பிடையே திடீரென ஏற்பட்ட வாக்குவாதம் கோஷ்டி மோதலாக மாறியது. இதில் ரசிகர் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்