சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சி மன்றம், கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை பதவியேற்பு விழாவை கண்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி மன்றத் தலைவராக முதலில் தேவி மாங்குடி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதில் முறைகேடு நடந்ததாக கூறி, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி அய்யப்பன் என்பவர், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாகவும்,. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் பிரியதர்ஷினி அய்யப்பனும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். தேவி மாங்குடி மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியதை அடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு நேற்று பதவியேற்றுக் கொண்டார்.