தமிழகத்தை பரபரப்பாக்கிய கேரள மெடிக்கல் கழிவு - கேரள அதிகாரி பரபரப்பு பேட்டி..

Update: 2024-12-21 06:27 GMT

நெல்லை மாவட்டம், நடுக்கல்லூர், கோடகநல்லூர் மற்றும் கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் கேரளாவை சேர்ந்த தனியார் புற்று நோய் மருத்துவமனை ஒன்று மருத்துவ கழிவுகளை கொட்டிச் சென்றது. இந்த விவகாரத்தில், மூன்று நாள்களுக்குள் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம், கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், கேரள மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளர் பின்சிஅகமது, சுகாதாரத்துறை அதிகாரி கோபுகுமார் ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட கேரள அரசின் அதிகாரிகள் குழு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவ மாதிரிகளே அதிகமாக உள்ளது என்றும், ஆபத்தான கழிவுகள் எதுவும் இல்லையென்றும் கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வு பற்றிய முழுமையான அறிக்கை கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தலைமை அதிகாரி கோபு குமார் தெரிவித்தார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அதிகாரிகள் தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்