வீட்டிற்குள் சாரை பாம்பை உயிருடன் விழுங்கிய கட்டுவிரியன் பாம்பு - அதிர்ச்சி வீடியோ
கடலூரில் வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு, மற்றொரு பாம்பை அப்படியே உயிருடன் விழுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோண்டூரை சேர்ந்த விக்ரமன் என்பவரது வீட்டிற்குள் ஒரு கட்டுவிரியன் பாம்பும், ஒரு சாரை பாம்பும் புகுந்தது. இரண்டும் வீட்டில் இருந்த ஷூவுக்குள் நுழைந்த நிலையில், சாரை பாம்பை கட்டுவிரியன் பாம்பு அப்படியே உயிருடன் விழுங்கியது. இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.