சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பிணம் - ரத்தம்.. மரண ஓலம்.. உறைந்து நின்ற பயணிகள்
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். சடலத்துக்கு அருகே சந்தேகப்படும் படியாக மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் இருந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அந்த மாற்றுத்திறனாளி தான் கொலை செய்துள்ளார் என கூறி அவரை தாக்கியதில் அந்த நபருக்கு தலை மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சைதாப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் மற்றும் மேற்கு மாம்பலம் காவல்துறையினர்
பிரேதத்தை கைப்பற்றி பின கூறாய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில்.
உயிரிழந்த பெண் 65 வயதாகும் லட்சுமி என்பதும் ரயில்களில் யாசகம் பெற்று ரயில் நிலையங்களில் தங்கி வந்ததாகவும். மேலும் இந்த பெண் மதுவிற்கு அடிமையாகிய நிலையில் சமீப நாட்களாக அந்த பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் ரயில் நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்த லட்சுமி உடன் இருந்த மாற்றுத்திறனாளி 38 வயதாகும் முத்து என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து முத்து, உயிரிழந்த லட்சுமி உடன் இருந்ததாக லட்சுமி உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் லட்சுமியிடம் முத்து நேற்று இரவிலிருந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் பணம் தர மறுத்ததால் லட்சுமியை அவர் கொலை செய்திருக்கலாம் என லட்சுமி உறவினர்கள் தெரிவித்தனர். எனவே பணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா என்று கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் முத்து என்ற அந்த மாற்றுத்திறனாளியை கைது செய்துள்ள மேற்கு மாம்பழம் காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் முக்கிய ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத
*சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கிடந்த பெண்ணின் சடலம்
*மரணமடைந்த பெண் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை*
*சந்தேகத்தின் அடிப்படையில் முத்து என்கின்ற மாற்று திறனாளியிடம் காவல்துறையினர் விசாரணை*
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். சடலத்துக்கு அருகே சந்தேகப்படும் படியாக மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் இருந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அந்த மாற்றுத்திறனாளி தான் கொலை செய்துள்ளார் என கூறி அவரை தாக்கியதில் அந்த நபருக்கு தலை மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சைதாப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் மற்றும் மேற்கு மாம்பலம் காவல்துறையினர்
பிரேதத்தை கைப்பற்றி பின கூறாய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில்.
உயிரிழந்த பெண் 65 வயதாகும் லட்சுமி என்பதும் ரயில்களில் யாசகம் பெற்று ரயில் நிலையங்களில் தங்கி வந்ததாகவும். மேலும் இந்த பெண் மதுவிற்கு அடிமையாகிய நிலையில் சமீப நாட்களாக அந்த பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் ரயில் நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்த லட்சுமி உடன் இருந்த மாற்றுத்திறனாளி 38 வயதாகும் முத்து என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து முத்து, உயிரிழந்த லட்சுமி உடன் இருந்ததாக லட்சுமி உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் லட்சுமியிடம் முத்து நேற்று இரவிலிருந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் பணம் தர மறுத்ததால் லட்சுமியை அவர் கொலை செய்திருக்கலாம் என லட்சுமி உறவினர்கள் தெரிவித்தனர். எனவே பணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா என்று கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் முத்து என்ற அந்த மாற்றுத்திறனாளியை மேற்கு மாம்பழம் காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.