கண்முன்னே உடல் நசுங்கி இறந்த கணவன் - கதறி அழுத மனைவி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி
சேலம் மாவட்டம் சங்ககிரியில் அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர். சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சிக்னலை கடக்க முயன்ற போது, லாரி மோதி மனைவியின் கண்முன்னே கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் சங்ககிரி அடுத்த கெமிக்கல் பிரிவு பகுதியில் நடந்து சென்ற பழனிசாமி என்பவர் மீது, லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.