பள்ளி செல்ல பிடிக்காமல் நாடகம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த சிறுவன் | Salem | School

Update: 2025-01-04 02:32 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திண்டமங்கலம் ரயில்வே பாலத்திற்கு அருகில் அழுது கொண்டிருந்த சிறுவனை, அந்த வழியாக சென்ற விவசாயி மீட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சிறுவனிடம் போலீசார் விசாரித்தபோது, தனது பெயர் திவனேஷ் என்றும், தன்னை 3 பேர் கடத்தி வந்து பாலத்தில் போட்டதாக கூறினான். இதனால், பதட்டமடைந்த போலீசார் சிறுவனின் போட்டோவை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரித்த போது, தொளசம்பட்டி அருகே மாரமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் - தமிழரசி தம்பதியின் மகன் என்பது தெரிந்தது. வீட்டின் அருகிலுள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் தீவனேஷை, அரையாண்டு விடுமுறை முடிந்ததால் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் பள்ளிக்கு செல்லாமல் மனம் போன போக்கில் சுற்றியதும், பள்ளி செல்ல பிடிக்காமல் பெற்றோரை ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து தாய் தமிழரசியிடம் சிறுவன் திவனேஷை போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்