திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தனியார் விடுதி உரிமையாளர் சிவராஜை அடித்துக் கொன்று, கேம்ப்ஃபயரில் வீசப்பட்ட வழக்கில் 2 பேர் கைதாகி உள்ளனர். மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மதுபோதையில் தகராறு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. எரிந்த உடலின் மேலும் சில பாகங்களை மீட்ட போலீசார், மதுரையைச் சேர்ந்த மணிகண்டன்,, சிவகங்கையைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோரை கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.