அமைச்சர் நிகழ்ச்சி... மாரடைப்பால் சரிந்த நபர்... அதிர்ந்த அதிகாரிகள்... பரபரப்பு காட்சி
சென்னை செனாய் நகரில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சாலையோர உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பதிவு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு சாலையோர உணவு வணிகர்களுக்கான பதிவு சான்றிதழ்களை வழங்க உள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளார்.
அமைச்சர் மா சுப்பிரமணியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருக்கு திடீர் மாரடைப்பு
மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்
சென்னை செனாய் நகரில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சாலையோர உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பதிவு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது
இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு சாலையோர உணவு வணிகர்களுக்கான பதிவு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் சென்னை வேளச்சேரி கண்ணிகாபுரம் பகுதியை சேர்ந்த ராஜா பங்கேற்றார்
நிகழ்ச்சி முடிந்து மா சுப்பிரமணியன் புறப்பட்ட சிறிது நேரத்தில் ராஜா திடீரென மயங்கி விழுந்தார்
மருத்துவ குழுவினர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்
பின்னர் எம் ஜி எம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர்
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது