``கார் நல்லா இருக்கே''... போலீசாரை வெயில் காயவிட்டு... காரை கைப்பற்றிய பைரவா
பெரம்பலூர் மாவட்டம், பாலக்கரை பகுதியில் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. ஓட்டுநர் அருகில் டீ - குடிக்கச் சென்றுவிட்டு அதிகாரிகளுடன் திரும்பிய நிலையில் ஜீப்பில் நாய் இருந்துள்ளது. அதை விரட்ட வெகு நேரம் முயற்சித்தும், நாய் இறங்காமல் அடம்பிடித்தது. பின்னர் தீ அணைப்பு வீரர்கள் வந்தும் நாயை பிடிக்க முடியவில்லை.அங்கிருந்த கம்பங்கூழ் வியாபாரி ஒருவர் நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி, ஜீப்பில் இருந்து நாயை வெளியேற்றினார்.