கொலை மிரட்டல் விட்ட ரவுடிபேபி சூர்யா... வழக்கு போட்ட பெண்

Update: 2024-04-02 02:03 GMT

சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் சித்ரா என்பவர் அளித்த புகாரில், தான் நடத்தி வரும் மக்கள் பார்வை என்ற அறக்கட்டளை மூலம், ரவுடி பேபி சூர்யாவின் கணவர் சிக்கந்தரின் பெண் தோழி சுமி என்பவருக்கு, ஒரு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாக தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பித் தராமல், ரவுடி பேபி சூர்யா, அவரது கணவர் சிக்கந்தர் மற்றும் பெண் தோழி சுமி ஆகிய 3 பேர் சேர்ந்து, கொலை மிரட்டல் விடுப்பதாக அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இதுதொடர்பாக, தன்னையும், தனது மகளையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக 3 பேர் மீதும், கடலூர் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் அந்த புகாருக்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்