மெரினா பீச்சில் முடிந்தது - சோகத்தில் மக்கள்

Update: 2024-12-25 05:49 GMT

மெரினா கடற்கரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உணவு திருவிழா 20ஆம் தேதி தொடங்கியது. 5 நாட்கள் நடைபெற்ற உணவுத் திருவிழாவில், 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்றனர். இவர்கள், ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த 286 வகையான சைவ மற்றும் அசைவ உணவுகளை உடனுக்குடன் சமைத்து, பொதுமக்களுக்கு வழங்கினர். நேற்று மாலையுடன் உணவுத் திருவிழா நிறைவுபெற்ற நிலையில், மொத்தமாக 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்