தொடர் விடுமுறை.. சூரிய உதயத்தை காண குமரியில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Update: 2024-12-25 06:48 GMT

கிறிஸ்துமஸ் பண்டிகை உட்பட தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல், சன்ரைஸ் பாயின்ட், முக்கடல் சங்கமம்,படித்துறை பகுதிகளில் பல மணி நேரம் காத்திருந்து கடலில் சூரியன் உதயத்தை கண்டு ரசித்தனர். மேலும் கடலில் குளித்தும், அலைகளோடு விளையாடியும் மகிழ்ச்சியடைந்தனர். கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கடைகளில் பாசி, சங்குகள், மாலைகள், அழகு சாதன பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

தொடர் விடுமுறையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பம், குடும்பமாக வந்துள்ளதால் கன்னியாகுமரி சுற்றுலாத் தலம் களைகட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்