ஜிபிஎஸ் கருவியுடன் கிராமத்திற்குள் வந்த கழுகு? - பார்த்ததுமே அதிர்ந்த மக்கள்
சித்திரைச்சாவடி பகுதிக்கு கழுகு ஒன்று வந்துள்ளது. இதனை கிராம மக்கள் அருகில் சென்று பார்த்தபொழுது கழுகின் உடலில் ஜிபிஎஸ் கருவிபோல் ஒரு கருவி கட்டப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கழுகைப் பிடிக்க முயன்றுள்ளனர். எனினும் கழுகு தப்பிச் சென்ற நிலையில், புதுப்பேட்டை போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த கிராமத்திற்கு வந்த போலீசார்,, கழுகு எங்கிருந்து வந்தது?.... யார் அனுப்பி இருப்பார்கள்?... கழுகின் உடலில் இருந்தது கேமராவா அல்லது ஜிபிஎஸ் கருவியா என விசாரணை மேற்கொண்டனர்.