கொடைக்கானலில் கடந்த ஒரு வார காலமாக காலை நேரங்களில் கடும் வெயிலும், மாலையில் பனியும், அதிகாலையில் உறைபனியாகவும் மாறியுள்ளது. கடும் குளிர் நிலவுவதால், தெருக்களில் நெருப்பு மூட்டி உறை பனியில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்கின்றனர். அதிகாலையில் உறைபனி 4 டிகிரிக்கும் கீழ் குறைந்துள்ளதால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வெகுவாக குறைந்து வருகின்றனர். உறைபனி தொடர்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.