"தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு சுதந்திரம் இல்லை.." - மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஆளுநர் | RN Ravi

Update: 2024-12-06 12:31 GMT

சென்னை, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அம்பேத்கரின் 69வது நினைவு தின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பரையாற்றினார். அம்பேத்கர் கொடுத்த அரசியலமைப்பு சட்டம் தான் சுதந்திரம் பெற்ற நேரத்தில் நமது நாட்டை நிலை நிறுத்தியதாக தனது உரையில் குறிப்பிட்டார். சிலர் தேர்தல் அரசியலுக்காக அம்பேத்கரை நீண்ட காலமாக பயன்படுத்திக் கொண்டு வருவதாக கூறினார். சமூக நீதி

குறித்து அதிக அளவில் பேசிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவர் சுதந்திரமாக இயங்க முடியவில்லை என்றும்

இது குறித்து தனக்கு பல புகார்கள் வருவதாக தெரிவித்தார். தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை, தலித் மக்கள் அருந்தும்

குடிநீர் தொட்டியில் மலம் கலப்படுகிறது, தலித்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் போன்ற பல்வேறு செய்திகளை தினமும் செய்தித்தாள்களில் படிக்கிறோம் என்றார். சமூக பாகுபாட்டை நாம் தகர்த்தெறிந்து, அம்பேத்கர் கனவை நாம் நினைவாக்க வேண்டும் என்றார்.   

Tags:    

மேலும் செய்திகள்