"ஜெயில்வாழ்க்கை வாழ்கிறோம்!எங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வையுங்கள்"-கதறும் இலங்கை தமிழ் அகதிகள்

Update: 2025-01-06 12:27 GMT

மண்டபம் அகதிகள் முகாமில் தங்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என இலங்கை தமிழ் அகதிகள் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் ஏராளமான இலங்கை தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்களுக்கு உணவு தவிர வேறு எந்த வசதியும் கிடைப்பதில்லை என்று இலங்கை தமிழ் அகதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி விடுமாறு கண்ணீர் மல்க அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்