கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பீகார் மாநில உருவாக்க தினவிழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி பாடல் பாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1912 ஆம் ஆண்டு வங்காள மாகாணத்தில் இருந்து, மார்ச் 22ஆம் தேதி நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் சொந்த மாநிலம் என்பதால் ராஜ்பவனில் நடைபெற்ற பீகார் உருவாக்க நாள் விழாவில் பங்கேற்ற ஆளுநர்,பீகாரின் கலாச்சாரம், கலை, பண்பாடு தொடர்பான கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது ஓவியம் ஒன்றிற்கு வண்ணம் தீட்டிய அவர், தொடர்ந்து ராமர் பாடலை இசைக்கலைஞர்களுடன் இணைந்து பாடினார்.