2 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை-கணவர் மீது வழக்குப்பதிவு

x

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இரண்டு மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு கொண்ட நிலையில், கணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பச்சேரியை சேர்ந்த சுப்பிரமணியன்-ரிபினா தம்பதிக்கு திருமணமாகி 11 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், ரிபினா மீண்டும் 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் சுப்பிரமணியன் அடிக்கடி குடித்து விட்டு சண்டை போட்ட நிலையில், மன உளைச்சல் அடைந்த ரிபினா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்