ரயில்வே நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்.. டாஸ்மாக்கே காரணம்.. உடனே அகற்ற பரபரப்பு கடிதம்

Update: 2024-09-26 10:11 GMT

ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளே ரயில்வே குற்றங்களுக்கு காரணம் என ரயில்வே பாதுகாப்புப் படை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.சென்னை ரயில்களில் தொடர்ந்து நடைபெறும் குற்ற செயல்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி பயணிகளுக்கு இடையூறு, ரயில்மீது கல்வீச்சு, சிக்னல் சேதம், பயணிகளிடம் திருட்டு போன்ற குற்றங்களை தடுப்பது குறித்த ஆய்வை ரயில்வே பாதுகாப்புப் படை மேற்கொண்டது. அதில், இந்த குற்றங்களுக்கு ரயில் நிலையங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்கள்தான் காரணம் என தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனத்துக்கு தெற்கு ரயில்வே எழுதிய கடிதத்தில் சென்னை புறநகர் பகுதியில் உள்ள மின்சார ரயில் நிலையங்களுக்கு அருகே 200 மீட்டர் தொலைவில் உள்ள 39 டாஸ்மாக் கடைகள் அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்