மும்மதமும் சேர்ந்து எடுத்து வந்த பொங்கல் சீர்வரிசை!-தஞ்சையை அதிர வைத்த அரசு கல்லூரி-கலக்கிய மாணவிகள்

Update: 2025-01-10 12:58 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் அரசு கல்லூரியில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தை சுவாரஸ்ய செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், கல்லூரிகளில் களைக் கட்ட தொடங்கி விட்டன கலர்ஃபுல் பொங்கல் கொண்டாட்டம்...

அந்த வகையில் தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் பொங்கல் கொண்டாட்ட வைப்-க்கு ஆயத்தமாகினர்...

பாரம்பரிய கொண்டாட்டத்திற்கு பாரம்பரிய உடையாண சேலை உடுத்தி மாணவிகள் குழும.....விழாக்கோலமானது கல்லூரி வளாகம்....

கொண்டாட்டத்தில் பொங்கல் செய்ய ஆர்வமுடன் இருந்த மாணவிகளுக்கு, மும்மதத்தை சார்ந்த பிரமுகர்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து வழங்கியது விழாவின் ஹைலைட்.

இப்படி சமத்துவ பொங்கல் விழா களைக் கட்ட, வளாகத்தில் வண்ண கோலமிட்டு, கரும்பு வைத்து, துறை ரீதியாக மாணவிகள் மண் பானையில் பச்சரிசி வெள்ளம் சேர்த்து சக்கர பொங்கல் சமைக்க...பொங்கல் பொங்கும் வேளையில் பொங்கலோ பொங்கல் என ஆர்பரித்தனர்...

பொங்கல் கொண்டாட்டத்தால் உற்சாகமடைந்தது மட்டுமல்லாமல், சமைக்கவும் கற்றுக் கொண்டோம் எனக் கூறுகிறார் மாணவி ஷாகிரா பேகம்..

Tags:    

மேலும் செய்திகள்